கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் அரசு பள்ளியில் 2025ம் ஆண்டுக்கான ஆண்டு விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொ)அ.சிவா. ஆசிரியர்கள் சித்ரா, அனிதா,இளவரசி,ஷஹானா. மற்றும் அரசினர் உயர்நிலைப்பள்ளி பாவளம் தலைமையாசிரியர் (பொ)ய.ஜான்ரத்தினம் மற்றும் ஆசிரியர்கள் தலைமையில் 2025 ம் ஆண்டுக்கான ஆண்டு விழா நடைபெற்றது.இதில் பேச்சிபோட்டி, விளையாட்டுப் போட்டி, ஓவிய போட்டி, பரதநாட்டியம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக SMC தலைவர் தமிழரசி,SMCதுணைத் தலைவர் ராஜேஸ்வரி,SMC தலைவர் ஆதிலட்சுமி,SMC துணைத் தலைவர் விஜயலட்சுமி மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக