குடியாத்தம் , பிப் 18 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 2025 26 ஆம் ஆண்டு நிதி நிதி ஆண்டு பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு
மாவட்டத் தலைவர் தசரதன் தலைமை தாங்கினார் நகரத் தலைவர் ஜெகன் வரவேற்புரை ஆற்றினார் மாநில செயலாளர் மீனாட்சி நித்தியா சுந்தர் பட்ஜெட் குறித்து சிறப்புரையாற்றினார்
இதில் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது
ஒன்றிய அரசின் மூலம் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரி களுக்கு ரூபாய் 10,000 கடனுதவி வழங்கி வந்தார்கள் தற்போது அதை உயர்த்தி 30,000 கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது வீடுகள் தோறும் குடிநீர் இணைப்புகள் எரிவாயு இணைப்புகள்
இது போன்ற நல்ல திட்டங்களை ஒன்றிய செய்து வருகிறது ஒன்றிய அரசின் திட்டங்களை பற்றி கூட்டத்தில்
எடுத்துரைத்தார் கூட்டத்தில் பி ஸ்ரீகாந்த் ஆர் சுகுமார் வாகீஸ்வரன் ஆர்வி ஹரிகிருஷ்ணன் ரங்கநாதன் தங்கம் சீனிவாசன் எஸ் ஜோதி பி லோகேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்
இறுதியில் நகர மன்ற உறுப்பினர் சீதாலட்சுமி சிவகுமார் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக