பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மாணவ/மாணவியர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மாணவ/மாணவியர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

பிற்படுத்தப்பட்டோர்/மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மாணவ/மாணவியர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட /மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASAVI Postmatric Scholarship) திட்டம் கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் /மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தகுதிகள்:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/மிபிவ/சீம மாணவ/மாணவியருக்கு எவ்வித வருமானவரம்பு நிபந்தனையிமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

முதுகலை, பாலிடெக்னிக் . தொழிற்படிப்பு போன்ற பிற படிப்பு அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணாக்கர்களுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

2024-25 ஆம் கல்வியாண்டில் மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், University Management Information System (UMIS) (http://umis.tn.gov.in/) என்ற இணையதளம் மூலம் வரவேற்க செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 

புதுப்பித்தல்:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே, கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று 2024-25 ஆம் ஆண்டில் 2,3 மற்றும் 4ஆம் ஆண்டு பயின்று வரும் புதுப்பித்தல் மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகைக்கு புதியதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. 

அம்மாணாக்கர்களுக்கு கல்லூரிகளில் நடப்பாண்டில் கல்வி பயில்வதை சம்மந்தப்பட்ட கல்லூரிகள் உறுதிசெய்து, புதுப்பித்தல் விண்ணப்பங்களை சரிபார்த்து மாவட்ட அளவிற்கு அனுப்பும் பட்சத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.. 
புதியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) புதியதாக கல்வி உதவித்தொகை பெற கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கை பெற்ற மற்றும் சென்ற வருடத்தில் கல்வி உதவிக்கு விண்ணப்பிக்க தவறிய புதிய மாணாக்கர்கள், 

தற்போது தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Nodal Officer) அணுகி (http://umis.tn.gov.in/) என்ற இணையதளத்தின் மூலம் சாதி மற்றும் வருமானச் சான்றுடன் உடனடியாக விண்ணப்பிக்கலாம். 

முதல்தலைமுறை பட்டதாரி எனில் அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 28.02.2024 ஆகும்.

மேற்படி விவரங்களை மாணாக்கர்களுக்கு தெரிவித்து பிவ/மிபிவ/சீம வகுப்பைச் சார்ந்த மாணாக்கர்கள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்குமாறு கல்லூரி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவலக நேரங்களில் அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad