திருப்புலாணி பெரியபட்டணம் கல்காடு கடற்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ உலர்ந்த இஞ்சி மூடை இராமநாதபுரம் மாவட்ட குற்ற பிரிவு காவல்துறையினர் கைப்பற்றினர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பெரிய பட்டணம் கல்காடு கடற்கரைப் பகுதியில் இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 2000 கிலோ உலர்ந்த இஞ்சியை ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு தடுப்பு காவல்துறையினர் கைப்பற்றினர். கடத்தி வரப்பட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில் 2000 கிலோ மதிப்புள்ள உலர்ந்த இஞ்சியை கைப்பற்றி திருப்புல்லாணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும்
2000 கிலோ மதிப்புள்ள உலர்ந்த இஞ்சியை கடத்தி வந்து இலங்கைக்கு படகு மூலமாக கொண்டு செல்ல காத்திருந்தவர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களை திருப்புல்லாணி காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக