திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாக்கிலிப்பட்டி கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் தண்ணீர் குடங்களுடன் முற்றுகை.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன சாக்கிலிப்பட்டி கிராமம் உள்ளது.
இங்கு 200க்கும் மேற்பட்ட வீடுகளில் 800 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
சின்ன சாக்கிலிப்பட்டி ஊராட்சி கிராமத்திற்கு முறையாக தண்ணீர் வழங்கப்படவில்லை மற்றும் குழாய் வரி,100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும் .
குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் முக்கிய தினங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுவதில்லை ஊராட்சி செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டு தண்ணீர் வழங்காததை கண்டித்தும், ஊராட்சி முறைகேடுகள் ,100 நாள் வேலை திட்டம் போன்றவற்றை ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை எனக்கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அதனைத் தொடர்ந்து சாக்கிலிப்பட்டி கிராமத்திற்கு முறையான தண்ணீர் மற்றும் 100 நாள் வேலை திட்டங்களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக