மானாமதுரை அன்னவாசல் விளக்குப்பகுதி அருகில் 200 ரூபாய் வழிப்பறி செய்து கொலை மிரட்டல் விடுத்த 21 வயது ரவுடி கைது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அன்னவாசல் விளக்கு அருகில் மானாமதுரையை சேர்ந்த பாலமுருகன் (50) என்பவர் நடந்து சென்ற போது அவரை வழிமறித்த கீழப்பசலையை சேர்ந்த அஜித் (21) சுமார் மூன்று அடி நீளம் உள்ள வாழை எடுத்து பாலமுருகனின் கழுத்தில் வைத்து சட்டை பையில் இருந்த 200 ரூபாயை கொள்ளையடித்ததோடு பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதனையடுத்து உடனடியாக பாலமுருகன் அழைத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அஜித் மீது மானாமதுரை நகர் மற்றும் சிப்காட் காவல் நிலையங்களில் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக