ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் 20 ஆம் ஆண்டு விளையாட்டு விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தி லிட்டில் பிளவர் பள்ளியில் 20வது ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டு, மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றிஅருளானந்தம் தலைமை தாங்கினார் .நிர்வாகி தமயந்தி ,பள்ளிச் செயலாளர் மாத்யூ ஜோயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அனுப்பபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நட்சத்திர விஜயகலா கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றினார் .ஒலிம்பிக் கொடியை ஹேமலதா அவர்களும் ,பள்ளியின் கொடியை விஜிலா அவர்களும் ஏற்றி வைத்தனர்.
முன்னதாக ஆண்டிபட்டி சி எஸ்ஐ .தேவாலயத்தில் இருந்து ஒலிம்பிக் தீபம் மாணவர்களால் தொடர் ஓட்டமாக பள்ளிக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர் அணிவாரியாக மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, விழா தொடங்கியது .மாணவ, மாணவிகள் அணிவாரியாக தங்கள் உடற்பயிற்சிகளை செய்து விளையாட்டு மைதானத்தை அழகுபடுத்தினர். பள்ளி மாணவர்கள் கராத்தே ,சிலம்பம் ,யோகா போன்ற பயிற்சிகளை செய்து காண்பித்தனர். பின்னர் வகுப்பு வாரியாக ஓட்டப்பந்தயம் ,ஷாட் புட் ,தடகள போட்டி , சாக்கு போட்டி ,உயரம் தாண்டுதல், தொடர் ஓட்டம் ,நீளம் தாண்டுதல், இசை நாற்காலி, பலூன் உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. மேலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டது .வெற்றி பெற்ற அனைவருக்கும் வழக்கறிஞர் உதயகுமார் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
நிகழ்ச்சியினை பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பூமா, கவிதா, ராகினி, பாண்டி செல்வி, திவ்யா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாணவர்கள் ,பெற்றோர் ,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக