வாகன சோதனையில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 1680 கிலோ மதிப்புள்ள பீடி இலைகள் மற்றும் சுறா இறகுகள் பிடிபட்டன. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 19 பிப்ரவரி, 2025

வாகன சோதனையில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 1680 கிலோ மதிப்புள்ள பீடி இலைகள் மற்றும் சுறா இறகுகள் பிடிபட்டன.

IMG-20250218-WA0635

வாகன சோதனையில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட சுமார் 1680 கிலோ மதிப்புள்ள பீடி இலைகள் மற்றும் சுறா இறகுகள் பிடிபட்டன.


இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜீ.சந்தீஷ் அவர்களின்  உத்தரவின் பேரில் போதைப் பொருள்களுக்கு எதிரான கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக வாகன சோதனை நடைபெற்று வருகிறது அதன்படி இராமநாதபுரம் இடையர் வலசை சந்திப்பில் இராமநாதபுரம் பஜார் காவல்நிலைய போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியாக வந்த  அசோக் (லைலேண்ட்) சரக்கு வாகனத்தில்  கடத்திவரப்பட்ட 1680 கிலோ பீடி பண்டல்கள் மற்றும்  கடத்தியவர்களை பிடித்து விசாரணை செய்ததில் வாகனத்தின்  ஓட்டுநர் மற்றும் வாகன உரிமையாளர் சலீம் மாலிக் வயது 35  ராசா மேற்கு தெரு மண்டபம் உடந்தையாக இருந்த முஹம்மது ஐக்கியம் வயது 30 ஷேக் அப்துல் காதர் மண்டபம் வடக்கு தெரு ஆகியோரை கைது செய்தனர். மேலும்  சேதுபதி நகர் கருப்பையா  மகன் விஜய் ஆனந்த் வயது 42 என்றவர்  வீட்டை சோதனை செய்தபோது வீட்டில் பதுக்கி வைத்திருந்த பீடி இலைகள் சுமார்1133 கிலோ (64 பெட்டிகள்) , மற்றும் சுறா மீன் இறகுகள் 47 சிறிய துண்டுகளாக கைப்பற்றப்பட்டும் ஒரு  லேப்டாப் ஆகியவையை இராமநாதபுரம்  பஜார் குற்ற பிரிவு போலீசார்     கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி  வைத்தனர் . இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்ற சட்டவிரோதமாக கடத்தலில்  ஈடுபவர்கள் மீது கண்காணித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜீ.சந்தீஷ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad