இராமநாதபுரம் மாவட்ட ஆயதப்படை வளாகத்தில் வசித்து வரும் காவலர் குடும்பத்தினர் மிகக்குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறும் விதமாக, ONGC Cauvery Asset Management நிறுனத்தால் ரூபாய் 15,00,000/- மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் காவலர்கள் குடியிருப்பு பகுதி ஆயுதப்படை வளாகத்தில் பால்வளத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.கண்ணப்பன் காவலர்கள் குடும்பங்கள் பயன்படும் வகையில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் மற்றும் ஆவின் பால் விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்து. முதல் பால் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜுலு, மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக