12 மாதங்களுக்குப் பிறகு மகனை பெற்றோரிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேங்காய் பட்டணம் மேம்படு துறைமுகம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மழையில் நனைந்தபடி மனநலம் குன்றிய நிலையில் சோர்வாக காணப்பட்ட ஒரு நபரை துறைமுக மேற்பார்வையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 20/5/24 ஆத்தமித்ரா பேரிடர் மீட்பு குழு தாலுகா ஒருங்கிணைப்பாளர் ராஜ ஸ்டீபன் தலைமையில் ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பர்களும் சமூக ஆர்வலர்களும் இணைந்து அவரை மீட்டு முதலுதவி செய்து புதுக்கடை காவல்துறையின் அனுமதி பெற்று புண்ணியம் அன்னை காப்பகத்தில் சேர்த்தனர் தற்போது ஒன்பது மாதங்களுக்குப் பிறகு உடல் நிலையும் மனநிலையும் சீரானதால் அபராகவே என்னை பெற்றோரிடம் அனுப்பி வையுங்கள் என்று காப்பக உரிமையாளரிடம் தெரிவித்திருக்கிறார் பின்னர் புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தலைமை காவலர் சஜீப் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு மறுநாள் காலை அவருடைய முகவரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்குத் தெரு குரோம்பட்டி ஊரைச் சார்ந்த மணி முனியம்மாள் அவர்கள் மகன் முனியாண்டீஸ்வரன் வயது 30 என்றும் தெரியவந்தது உடனடியாக முனியாண்டீஸ்வரன் பெற்றோரை புதுக்கடை காவல் நிலையத்திற்கு வரவழைத்து தன் மகன் முனியாண்டீஸ்வரனை பெற்று வருடம் ஒப்படைத்தனர் 12 மாதமாக காணாமல் போன தன் மகனை கட்டி தழுவி கண்ணீர் விட்டு அழுதனர் பின்னர் முனியாண்டீஸ்வரர் கூறுகையில் மகனை மீட்டெடுத்த சமூக ஆர்வலர்களுக்கும் ஒன்பது மாதம் பராமரித்த அன்னை காப்பக உரிமையாளருக்கும் உடனடியாக முகவரி கண்டுபிடித்து மகனை ஒப்படைத்த காவல்துறையினருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டனர் பின்னர் சப் பிரின்ஸ்பெக்டர் பிரைட்னஸ்ஸிங் அவர்கள் வாழ்த்தி முனியாண்டீஸ்வரனை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர் இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்களும் மனிதநல உரிமைகளுக்காக பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்
கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக