பேர்ணாம்பட்டு , பிப் 6-
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ரூ. 2.41 லட்சத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களின் தொலை நோக்கு பார்வை 2023 - ன் படி அனை வருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ்
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பேர்ணாம்பட்டு வட்டத்தில் 304 அடுக்குமாடி குடியிருப்புகள் (400 சதுர அடி) பேர்ணாம்பட்டு அடுத்த பத்தலபல்லி திட்டப்பகுதியில்அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற (ம) கிராமபுற / ஏழை எளிய மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப் படும்.அடுக்குமாடி குடியிருப்புகளின்
சிறப்பு அம்சங்கள்
வீட்டின் மொத்த பரப்பளவு 400 சதுர அடிகள்.திட்டப்பகுதிக்கு அருகிலேயே மாணவு, மாணவிகளுக்கு அரசு பள்ளி உள்ளது. 3 கி.மீட்டருக்குள் அரசு மருத்துவ மனை உள்ளது.மின்சார வாரியம், நகராட்சி அலுவலகம், வட்டார வார்ச்சி அலுவலகம் அனைத்தும் 3 கி.மீ தூரத்திற்குள் உள்ளது.பேருந்து நிலையம் / மார்க்கெட் பகுதிகள் 2.5 கி.மீட்டர் தூரத்திற்குள் உள்ளது.
ரூ.10.91 லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு வீடற்ற ஏழைகளுக்காக
ரூ. 2.41 லட்சத்திற்கு வழங்கப்படும்
தகுதி பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவில் ஒதுக்கீடு கோரும் நபரின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.மனுதாரர் (ம) குடும்பத்தினர் பெயரில் வேறெங்கும் வீடு, நிலம் இருக்ககூடாது.தேவையான ஆவணங்கள் கணவர் (மற்றும்) மனைவி ஆதார் நகல், குடும்ப அட்டை நகல் (மற்றும்) வங்கி கணக்கு புத்தக நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அளிக்க வேண்டிய இடம்
குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம்
முகாம் நடைபெறும் என்பதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக