100 நாள் பணியின் போது தேனீக்கள் கொட்டியதில் ஐந்து பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் சிகிச்சை
குடியாத்தம் , பிப் 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பசுமாத்தூர் பகுதியில் இன்று 50 க்கும் மேற்பட்டோர் 100 நாள் பணியில் ஈடுபட்டிருந்தனர்,அப்பொழுது அருகே இருந்த மாந்தோப்பில் இருந்து வந்த தேனீக்கள் 100 நாள் பணி ஈடுபட்டிருந் தவர்களை சூழ்ந்து கொண்டு அவர்களை தேனீக்கள் கொட்டியது,அப்பொழுது 100 நாள் பணியில் இருந்த பெண்கள் அலறி அடித்து ஓடினர் இதனையடுத்து துளசி ( வயது 75)சித்ரா, சிவகாமி, சுந்தரம், கண்ணன், ஆகிய ஐந்து பேரை தேனீக்கள் பலமாக கொட்டியது,
இதனையடுத்து படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கு தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக