மகளிர்க்கு1000 ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை மற்றும் விடியல் பயணத்தால் பெண்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர் திராவிட மாடல் அரசின் சாதனைகளை விளக்கி கூறி தொகுதி பொறுப்பாளர் பெறுநற் கிள்ளி பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் வழிகாட்டுதலின்படி, திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியம் மாடாம்பூண்டி, திருபாலப்பந்தல், எடையூர், அருதங்குடி ஆகிய ஊராட்சிகளில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜ் செல்வகுமார், கிருஷ்ணமூர்த்தி, உதயா ஆகியோர் முன்னிலையில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக கொள்கை பரப்பு செயலாளர், ரிஷிவந்தியம் தொகுதி பொறுப்பாளர் பெறுநற் கிள்ளி கலந்துகொண்டு பேசுகையில் மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை வாழ்கின்ற ஒரே அரசு நமது திராவிட மாடல் அரசு இந்தியாவில் வேறு எங்கும் இது போன்ற திட்டம் இல்லை அதுபோல் விடியல் பயணம் அதன் மூலம் மகளிர்களுக்கு மிகவும் பயன்படும் அற்புதமான ஒரு திட்டம், இந்த திராவிட மாடல் ஆட்சியில் மகளிர்களுக்கு ஏராளமான சலுகைகள் திட்டங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் செயல்படுத்தி வருகிறார், அதனால் பெண்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக விட்டார்கள் அவர்களை கட்சி பாகுபாடு இன்றி அணுகி திமுகவின் சலுகைகளை எடுத்துச் சொல்லி வீடு வீடாக தென்னை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க வேண்டும், பாக முகவர்கள் ஒவ்வொருவரும் 100 வாக்காளர்களை பிரித்துக் கொண்டு அவர்களை தினமும் சந்தித்து நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை கூறி தீவிரமாக வாக்கு சேகரிக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார், இந்த நிகழ்வில் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் சிவக்குமார், குரு ராஜன், ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட ஒளிப்பதிவாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக