SNS சார்பில் நடைபெற்ற 9வது ஜூனியர் தடகள போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. மாநில அளவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் கலந்து கொண்ட குன்னூர் திருமதி. புல்மோர்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர்.
மாநில அளவிலான ஜூனியர் ஓட்டப்பந்தய போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 12,14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் திருமதி.புல்மோர்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர், முதல்வர், உடற்பயிற்சியாளர் மற்றும் ஆசிரியர்கள் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக