கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இந்திய குடியரசு கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் செய்தியாளர் சந்தித்து பேசுகையில்:- வேங்கைவயல் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவு படுத்தி கொடூர குற்றத்திற்கு நியாயமான ஒரு தீர்வு நடவடிக்கையோ இல்லாமல் வழக்கம்போல் திமுக அரசு ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறது யார் புகார் தந்தார்களோ அவர்கள் பெயரிலேயே குற்றவாளிகள் என குற்ற பதிவு செய்யப்பட்டிருக்கிறது இதற்காக ஒரு கிராமத்திற்குள் இந்த அரசாங்கம் இதற்காக எடுத்துக் கொண்ட நேரம் இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டு 397 பேரை விசாரணைக்கு உள்ளாக்கினர்.
இந்த கிராமத்தில் உள்ள எல்லோருடைய இரத்தம் மலம் சிறுநீரகம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டது நூற்றுக்கணக்கான காவலர்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டனர் ஓய்வு பெற்ற நீதிபதி விசாரனை நடத்தினார் ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைக்கான பாதுகாப்பு தீர்வு கிடைத்திருக்கிறதா என்றால் இல்லை திமுக திட்டமிட்டு ஒரு நாடகத்தை நடத்தியது தாழ்த்தப்பட்ட தலித் மக்களை வஞ்சித்தது தொடக்கத்திலேயே நாங்கள் கூறினோம் சி.பி.சி.ஐடி ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை தேவைகளை என கூறினோம்.
தற்போது உயர் நீதிமன்றத்தில் பணியாற்றுகின்ற ஒரு நீதிபதியை விசாரணக் குழுவில் தலைவராக நியமித்து மாநில அரசு முறையான விசாரணையை கொண்டு வரும் என இந்திய குடியரசு கட்சி வலியுறுத்துகிறது, கீழ்வெண்மணி காலத்தில் இருந்து விழுப்புரம் காலம்வரை வாடிக்கையாக பின்பற்றி இருக்கிற ஒரு நடவடிக்கை எந்த குற்ற சம்பவத்திற்கும் இதுவரை உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை நடவடிக்கை எடுக்கப்படவில்லை பாதுகாப்பு வழங்கப்படவில்லை அண்ணா திமுக ஆட்சி காலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வேண்டும் என கோரிக்கை வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானவர்கள் உயிர்நீத்தவர்களுக்கு நினைவுச் சின்னத்தை வைத்து சிலைகளை வைத்து தெரிந்து வைத்துள்ளார்.
கீழ்வெண்மணி சம்பவத்திற்கு நினைவுச் சின்னம் வைக்காத திமுக அரசு சமூகப் போராளிகளுக்கு சிலை வைப்பது ஓய்வூதியம் வழங்குவது போன்ற தேர்தல்களில் அரசியல் ஜாதி அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலை தமிழகத்தில் திணிக்கப்படுது இந்த திமுக அரசு தான்.
தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் 2026-ல் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு இருக்கிறது அது தவிர்க்க முடியாத ஒரு அரசியல் அதை அவர் எப்படி பயன்படுத்த போகிறார் எப்படி கொண்டு செல்ல போகிறார் எத நோக்கி பயணம் கருத்தியலும் கொள்கையும் இருக்கும் என்பதுதான் அவருக்கு ஒரு ஆதரவு இருக்கிறது என கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக