பரமக்குடி Gpay மூலமாக லஞ்சம் வாங்கிய நகராட்சி பிளான் அப்ரூவல் அலுவலர் கைது
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பணிபுரியும் பாரதி கண்ணன் தனது வாடிக்கையாளருக்கு சொந்தமான பரமக்குடியில் உள்ள நான்கு வீட்டுமனைகளுக்கு நகராட்சியில் பிளான் அப்ரூவல் பெறுவதற்கு கட்டணமாக ரூபாய் 76.850 கடந்த வாரம் செலுத்தியுள்ளார் இந்த நிலையில் இது தொடர்பாக நகராட்சியில் டவுன் பிளானிங் அலுவலராக பணிபுரியும் பற்குணன் என்பவரை சந்தித்து பாரதி கண்ணன் விவரம் கேட்ட பொழுது ஒரு வீட்டு மனைக்கு ரூபாய் 5000 வீதம் நான்கு வீட்டுமனைகளுக்கு மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார் அதற்கு பொறியாளர் நகராட்சிக்கு கட்ட வேண்டிய அரசு பணத்தை முழுவதும் செலுத்திய உள்ளேன். ஆகையால் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார் இந்த நிலையில் பாரதி கண்ணன் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்துள்ளார் இதனை அடுத்து பிளானிங் அலுவலர் பற்குணனை ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் விசாரணை நடத்தியதில் gpay மூலம் பற்குணம் அலைபேசி எண்ணிற்கு ரூபாய் 20,000 பணம் லஞ்சமாக பெற்றது தெரிய வந்துள்ளது இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பற்குணனை செல்போனுடன் பிடித்து கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக