காட்பாடி ,ஜன 21 -
வேலூர் மாவட்டம். காட்பாடி கிங்ஸ்டன் பொறியில் கல்லூரியில் நடைபெற்ற சோதனை திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மகன் வேலூர் எம்.பி. கதிர்ஆனந்துக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட (ED) இ.டி.ரெய்டு சோதனையின் விவரங்கள் வெளியானது. இந்த சோதனையில் வேலூர் திமுக. எம்.பி. கதிரானந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரிகளில் இருந்து ரூ.13.7 கோடியும், வீட்டின் லாக்கர்களில் இருந்து ரூ.75 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக