தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நயினார்புரத்தில் தருமயுக திருப்பதி அய்யா வழி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திரு ஏடுவாசிப்பு திருவிழா நடத்தப்படும் .
அதன் படி இந்த ஆண்டு திரு ஏடுவாசிப்பு திருவிழா கடந்த 29ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் ஸ்ரீ குரு சிவச்சந்திரன் குழுவினர் திரு ஏடு வாசித்தார். தொடர்ந்து பால் முறை திருநாள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இரவு ஸ்ரீ குரு சிவச்சந்திரன் குழுவினர் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. திங்கட்கிழமை மாலை பால் முறை திருவிழா சப்பர பவனி நடைபெற்றது. கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பர புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
இதில் பதி நிர்வாகிகள் பஜனை குழுவினர் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக