முக்காணி - ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட ஆத்தூர் இன்ஸ்பெக்டர். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 24 ஜனவரி, 2025

முக்காணி - ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட ஆத்தூர் இன்ஸ்பெக்டர்.

முக்காணி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட ஆத்தூர் இன்ஸ்பெக்டர்.

தூத்துக்குடி ஸ்பிக் பகுதி அபிராமி நகரை சேர்ந்த துரைராஜ் மனைவி பிரம்மசக்தி(63), துரைராஜ் இறந்த நிலையில் பிரம்மசக்தி உறவினர்
வீட்டில் வசித்து வந்துள்ள தாககூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர் வீட்டில் இருந்து வெளியேறிய பிரம்மசக்தி, ஆத்தூர் பகுதியில் இருந் துள்ளார். நேற்றிரவு 7.30 மணியளவில் முக்காணி தாமிரபரணி பழைய ஆற் றுப்பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்று ஆற்றில் குதித்துள்ளார்.

இதைப் பார்த்த அப் பகுதி மக்கள், ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக் டர் மாரியப்பன் தலைமை யில் போலீசார் வந்தனர். பின்னர் போலீசார் உத வியுடன் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உடனடியாக கயிற்றை கட்டி ஆற்றுக் குள் இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

தொடர்ந்து மூதாட் டியை ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச் சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் குறைந்தளவில் சென்றதால் மூதாட்டி உயிர் தப்பியது குறிப்பி டத்தக்கது.

மேலும் துணிச்சலுடன் உடனடியாக ஆற்றுக்குள் இறங்கி மூதாட்டியை காப் பாற்றிய இன்ஸ்பெக்டர் மாரியப்பனை அனைத்து தரப்பினரும் பாராட்டி னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad