நகர்புற பேருந்துகளை சிறப்பு பேருந்துகளாக இயக்கும் போக்குவரத்து துறை. குழப்பத்தில் பொதுமக்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஜனவரி, 2025

நகர்புற பேருந்துகளை சிறப்பு பேருந்துகளாக இயக்கும் போக்குவரத்து துறை. குழப்பத்தில் பொதுமக்கள்.

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்கு பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வழக்கமாக செல்லும் பேருந்துக்கு பதிலாக நகர் பகுதியில் செல்லக்கூடிய டவுன் பஸ்களை சிறப்பு பேருந்து என பெயர் மாற்றி அதிக கட்டண வசூலில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது தமிழக அரசு. 

இந்த பேருந்து திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழிகளில் பல இடங்களில் நிறுத்தி செல்லும் போது, பொதுமக்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. பெண்களுக்கு இலவச கட்டண பேருந்து என நினைத்து பேருந்தில் ஏறி, பயண சீட்டு கேட்ட நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதாரண நகர்புற பேருந்துகளை சிறப்பு அந்தஸ்து கொடுத்து திருச்செந்தூருக்கு செல்லும் பேருந்தாக மாற்றும்போது பற்பல குழப்பங்கள் நிலவி வருகிறது. 

கட்டண பிரச்சனை, இலவச கட்டணம், பெண்களுக்கு இலவசம் என பலவித அறிவிப்புகளை தொடர்ந்து பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad