உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் வானியல் கருத்தரங்கு நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் வானியல் கருத்தரங்கு நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே .ராஜு அவர்கள் பேசும்போது கூறிய கருத்துக்கள்..... வானியலில் ஒரு அபூர்வ நிகழ்ச்சி
அவ்வப்போது வான்வெளியில் இயற்கை பல சாகச நிகழ்ச்சிகளை நடத்துவதுண்டு. இந்த வாரம் செவ்வாய், வெள்ளி, சனி,வியாழன் ஆகிய நான்கு கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் ஒரு அபூர்வ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. குறிப்பாக வரும் புதன்கிழமை விடியற்காலையில் மேற்கிலிருந்து கிழக்கு திசை நோக்கி நான்கு கோள்களும் ஒரே நேர்கோட்டில் அமையும். இது இயற்கையின் ஒரு அபூர்வமான நிகழ்ச்சியாகும். கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சூரியனை சுற்றி வருகின்றன. ஒரே நேர்கோட்டில் எப்பொழுதும் சுற்றி வராது. இதனைக் குறித்து சில சமூக வலைத்தளங்களில் அனைத்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் வருவதாக ஒரு வீடியோ பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அனைத்து கோள்களிலும் ஒரே நேர்கோட்டில் வருவது என்பது மிக மிக அபூர்வமான நிகழ்ச்சி. அது தற்சமயம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஒரே நேர்கோட்டில் வரும் வானியல் குறித்து ஜோதிடர்கள் கூறுவது அறிவியல் பூர்வமானது அல்ல. ஜோதிடர்கள் சூரியனையும் நிலாவையும் கோள்கள் என கூறுகின்றனர். சூரியன் ஒரு நட்சத்திரம். நிலா ஒரு துணைக்கோள். இதுவல்லாமல் ராகு, கேது என்ற இரண்டு கோள்களை இருப்பதாக குறிப்பிடுகிறார்கள். அப்படி எதுவுமே இல்லை. ஜோதிடத்தில் யுரேனஸ், நெப்டியூன், போன்ற கோள்கள் எல்லாம் வருவதில்லை. இன்றைய வானியல் சூரியனை சுற்றி வரும் கோள்கள் மட்டுமல்ல நட்சத்திரங்கள், பால்வெளிகள், நட்சத்திரம் மண்டலங்கள், பிரபஞ்சம் என விரிந்து செல்கிறது. மேலும்ஸ்ட்ரிங் தியரி எனப்படும் அறிவியல் கோட்பாடு நம் பிரபஞ்சம் மட்டுமல்ல இது போன்ற கோடிக்கணக்கான பிரபஞ்சங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு வகையான இயற்பியல் விதிகள் செயல்படலாம் என நவீன அறிவியல் கூறுகிறது. மக்கள் மூடநம்பிக்கைகளை விட்டு கோள்களை அறிவியல் பார்வையுடன் பார்க்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் கே. ஜே .ராஜு அவர்கள் கூறுகிறார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக