திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி வி.வர்ஷிகா மாநில அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 80 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் (12.20 செகண்ட் )முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கும் ஜெய்வாபாய் பள்ளிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் அவரை திருப்பூர் மாநகராட்சி மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார் அவர்கள் தன்னுடைய அலுவலகத்திற்கு வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் பல்வேறு அமைப்புகள் மாணவி வர்ஷிகா அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக