தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கழிவை கொட்டுவதை தடுக்க வேண்டும் என நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கேரள ஆளுநர் மாண்புமிகு ராஜேந்திரஅர்லேர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 17 ஜனவரி, 2025

தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கழிவை கொட்டுவதை தடுக்க வேண்டும் என நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கேரள ஆளுநர் மாண்புமிகு ராஜேந்திரஅர்லேர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார்

 

3a52a913-8b8f-48d9-b771-e27446ccabb2

தமிழக எல்லையோர மாவட்டங்களில் மருத்துவ கழிவை கொட்டுவதை தடுக்க வேண்டும் என நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் கேரள ஆளுநர் மாண்புமிகு ராஜேந்திரஅர்லேர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தார்


இன்று (17.01.2025) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாராளுமன்ற நிலைக்குழு (சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்) கூட்டத்தில் பங்கேற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன்  மாண்புமிகு கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட துணை செயலாளர் திரு செந்தில் ராஜா, பரணிதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மனு 1: நாமக்கல்லில் இருந்து கேரளாவிற்கு முட்டை ஏற்றி செல்லும் லாரிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இருந்தும் வழக்கு பதிவு செய்தல்


மனு 2: மருத்துவ கழிவுகளை தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவதை தடுத்தல்


மனு 3: டேங்கர் லாரிகளுக்கு ஆன்லைன் கேஸ் பதிவு செய்வதால் லாரி உரிமையாளர்களுக்கு ஓட்டுநர்களுக்கும் தெரிவதில்லை என்ற நிலை இருந்து வந்துள்ளது. அதனை போக்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் தெரியப்படுத்தவும் உரிய ஆவணங்கள் இருந்தும் வழக்கு பதிவு செய்வதை தடுத்தல் 


மனு 4: கேரளாவில் கொங்கு வேளாளர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் பார்த்திபன் மற்றும் நாமக்கல் மாவட்ட தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad