சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் நெஞ்சு வலி காரணமாக உயிர் இழந்த ஓட்டுநர்க்கு இல்லம் தேடி உதவி! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 20 ஜனவரி, 2025

சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நலச் சங்கம் சார்பில் நெஞ்சு வலி காரணமாக உயிர் இழந்த ஓட்டுநர்க்கு இல்லம் தேடி உதவி!

லத்தேரி பகுதியை சார்ந்த ஓட்டுநர் வாகனம் ஓட்டும் போது நெஞ்சு வலி காரணமாக மரணம்! 

கே.வி குப்பம் , ஜன,19-

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சார்ந்த கனக ஓட்டுநர் யுவராஜ் (வயது 45) வாகனம் ஓட்டும்போது நெஞ்சு வலி காரணமாக மரணம் அடைந்தார். மரணமடைந்த அவரை அடையாளம் தெரியாமல் இருந்த நிலையில் அவருடைய தொலைபேசி எண் மூலமாக குடியாத்தம் சரவணன்  வேலூர் மாவட்ட செயலாளர் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக் கப்பட்டு அவர் அங்கிருந்து கே வி குப்பம் எம்.குபேந்திரன்  வேலூர் மாவட்ட துணை செயலாளர் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நலச் சங்கம் அவர்களை தொடர்பு கொண்டு லத்தேரி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் வீட்டுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு அங்கிருந்து அவர் உடல் கொண்டுவரப்பட்டது. சட்ட உரிமை பாதுகாப்பு நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் லயன் தனலட்சுமி  மாநில பொதுச் செயலாளர் ஏ டி கண்ணன் அவர்களின் ஆலோசனைப்படி மாநில நிர்வாக செயலாளர் பாக்யராஜ் அவர்கள் அறிவுறுத்தலின்படி வேலூர் மாவட்ட செயலாளர் குடியாத்தம் சரவணன் அவர்கள் தலைமையில் சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம் சார்பில்  சிறு தொகையாக பத்து ஆயிரம் ரூபாய் ஓட்டுநர் யுவராஜ் குடும்பத்திற்கு நேரில் சென்று கொடுக்கப்பட்டது உடன் மாவட்ட துணை செயலாளர் மு.இன்பராஜ் மற்றும் எம். குபேந்திரன்  ஓட்டுநர் சங்க மாவட்ட செயலாளர் க.சேட்டு பேர்ணாம்பட்டு ஒன்றிய செயலாளர் எஸ் கருணாகரன் குடியாத்தம் நகர செயலாளர் சு. ஆனந்தன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.‌


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad