புதுக்கோட்டையில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

வெள்ளி, 3 ஜனவரி, 2025

புதுக்கோட்டையில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

IMG-20250103-WA0071

புதுக்கோட்டையில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.


புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்தறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் அக்குழுவின் தலைவர் மாண்புமிகு சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வில் மாண்புமிகு கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஜோதிமணி, மாண்புமிகு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு துரை வைகோ, மாண்புமிகு ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு நவாஸ் கனி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எம். அருணா இ.ஆ.ப, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad