தமிழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,இளம் தலைவர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா.
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என திராவிட மாடல் நல்லாட்சி நடத்திடும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரின் தவப்புதல்வராக,முதல்வரின் துணையாகவும், உதயம் என்றாலே விடிவாகவும் விளங்கும் நம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்,கழக இளைஞரணி செயலாளர்,இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை தமிழகமே கொண்டாடி மகிழும் நிலையில் மலை மாவட்டம் நீலகிரியில் உதகை நகரில் முள்ளிக்கொரையில் அமைந்திருக்கும் அன்பு அறிவு ஆதரவற்றோர் இல்லத்தில் பிறந்தநாள் விழா கழகத் தோழர்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் உதகை நகர செயலாளர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் திரு ஜார்ஜ் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. திரு கன்டோன்மன்ட் வினோத்குமார் கழக மாவட்ட பிரதிநிதி மற்றும் விவேக் பொந்தோஷ் முன்னிலை வகித்தனர், சிறப்பு அழைப்பாளர்களாக கழக பொறியாளர் அமைப்பாளர் செந்தில் மற்றும் முன்னாள் துணைத் தலைவர் பரலியார் ராஜேந்திரன் ஒருங்கிணைப்பாளர் குன்னூர் ஒன்றிய எதற்கு ஒருங்கிணைப்பாளர் தொழில் நுட்ப அணி, உதகை நகர மன்ற உறுப்பினர்கள் லலிதா 6- வது வார்டு, மேரி ஃப்ளோரினா 23 -வது வார்டு, பிரியா 26-வது வார்டு, கீதா 25வது வார்டு ஆகியோர் கலந்து கொண்டு பிறந்தநாள் கேக் வெட்டி இல்லத்தில் தங்கியுள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கி பாடலுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் கல்லூரி மாணவர் சுதீப் துணை முதல்வர் அவர்களின் இளைஞர்களுக்கான சேவையை குறித்து சிறப்பான பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிகழ்வினை புலவர் நாகராஜ் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் நிறைவில் நன்றியுரை கண்டோன்மெண்ட் வினோத் அவர்கள் வழங்கினார்,விழா இனிதே நிறைவுற்றது. சிறப்புமிக்க இவ்விழாவிற்கு அன்பு அறிவு இல்லத்தில் உள்ள மக்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் கோவர்த்தனன் ராமசாமி செய்து கொடுத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீன தயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக