திருப்பூர் ஸ்ரீ ஐயப்ப சாமி தர்மசாஸ்தா பக்தர்கள் குழுவின் 35 ஆம் ஆண்டு அன்னதான விழா அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோயிலில் இன்று நடைபெற்றது இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர்.வெ.அ. கண்ணப்பன் தலைவர் அவர்கள் மற்றும் திருப்பூர் மாநகராட்சி 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி சகுந்தலா ஈஸ்வரன் அவர்கள் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள், பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஸ்ரீ ஐயப்பசாமி தர்மசாஸ்தா பக்தர்கள் குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக