திருமங்கலத்தில் வளர்ச்சி குறைபாடுகள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

சனி, 4 ஜனவரி, 2025

திருமங்கலத்தில் வளர்ச்சி குறைபாடுகள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

IMG_20250104_150820_872

திருமங்கலத்தில் வளர்ச்சி குறைபாடுகள் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இறகுகள் அறக்கட்டளை சார்பாக திருமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான பூந்தளிர் ஆரம்ப நிலை சீரமைப்பு திட்டத்தை வடிவமைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றனர் தொடர்ந்து அசிம் பிரேம்ஜி அறக்கட்டளையின் உதவியுடன் விரிவாக்கி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது இந்த பூந்தளிர் திட்டத்தில் இதுவரை வளர்ச்சி குறைபாடுகள் உள்ளது 110 குழந்தைகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் குழந்தைகள் அனைவருக்கும் விரிவான ஆரம்ப கால தலையீடு சேவைகள் அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது மேலும் சிறப்பு கல்வியாளர்கள் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் அடங்கிய குழுவினால் இந்த குழந்தைகள் அனைவருக்கும் பிசியோதெரபி பேச்சு சிகிச்சை ஆகிய நிபுணர்கள் அடங்கிய குழு குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து சிகிச்சை செய்து வருகின்றனர். இதனை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. தேவர் சிலையிலிருந்து ஆரம்பித்து பேரணியுடன் தொடங்கி மகளிர் காவல் நிலையம்  நிறைவடைந்தது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் எஸ். சாமிநாதன், சேவா சங்கம் ஆய்க்குடி நிறுவனர் பத்மஸ்ரீ எஸ் ராமகிருஷ்ணன், திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பி.ராம்குமார் ஆகியோ மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad