உயிருக்கு உலைவைக்கும் ஆபத்தான சாலை. - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வெள்ளி, 31 ஜனவரி, 2025

உயிருக்கு உலைவைக்கும் ஆபத்தான சாலை.

உயிருக்கு உலைவைக்கும் ஆபத்தான சாலை.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கத்துறையில் இருந்து பெருமணல் செல்லும் சாலை கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வதால் மிகவும் பழுதடைந்து உள்ளது. மேற்படி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. 

மழை நேரங்களில் சேரும் சகதியுமாக மாறி உயிருக்கே ஆபத்தான நிலையில் உள்ளது. சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் வாகனங்களை ஓட்டுகின்றனர். 

எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து மேற்படி சாலையை சீரமைத்து தந்தால் பொதுமக்களுக்கு மிகுந்த பயன் பெறுவார்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad