பழுதடைந்த சாலையை செப்பனிட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி - சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

செவ்வாய், 28 ஜனவரி, 2025

பழுதடைந்த சாலையை செப்பனிட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி - சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

பழுதடைந்த சாலையை செப்பனிட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி 

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா, இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட நக்கனேரி கிராமத்தின் தார் சாலையானது கனரக வாகனங்கள் அடிக்கடி செல்வதால் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு இடையூறாகவும், ஆபத்தாகவும் இருந்து வந்தது. 

இந்நிலையில் மேற்படி பழுதடைந்து உள்ள தார் சாலையை நக்கனேரியில் இருந்து நக்கனேரி மின் வாரியம் வரையில் செப்பனிட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில் தமிழக சபாநாயகர் மாண்புமிகு அப்பாவு அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

மேற்படி சாலை செப்பனிட பட்டு சரி செய்ய பட்டால் நக்கனேரி ஊர் பொதுமக்கள் மிகுந்த பயனடைவார்கள்.

திருநெல்வேலி மாவட்ட செய்தி தொடர்பாளர் என்.ராஜன், இருக்கன்துறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad