ரயில்வே பயணசீட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுப்பதில் ரயில்வே பாதுகாப்பு படையின் பங்கு.
இந்திய ரெயில்வே பயணசீட்டு முறையில் தொடர்ச்சியாக காணப்படும் பயணசீட்டு கையாடுதல் மற்றும் கருப்பு சந்தை நடவடிக்கைகள் குறிப்பாக உச்சநிலைப் பயண காலங்களில் (உதாரணமாக பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில்) பெரும் சவாலாக இருக்கிறது. இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் உண்மையான பயணிகளுக்கு சம உரிமையுடன் பயணசீட்டுகளை அணுகுவதில் தடையையும். ரெயில்வே அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கின்றன. இதற்கு பதிலளிக்க, ரெயில்வே பாதுகாப்பு படை (RPF) இந்த சிக்கலை தீர்க்கவும், ரெயில்வே சேவைகளை சீரான முறையில் அனைவருக்கும் வழங்கவும் முழுமையான மற்றும் பலமுகமான தந்திரங்களை செயல்படுத்தியுள்ளது.
RPF எடுத்த நடவடிக்கைகள்
1. தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் திடீர் அதிரடி நடவடிக்கைகள்
RPF-யின் கணினி குற்றம் தடுப்பு பிரிவு (Cyber Crime Prevention Cell) பயணசீட்டு முன்பதிவு முறைகளை நுட்பமாக ஆராய்ந்து, சந்தேகத்திற்கிடமான பிரச்சினைகளை கண்டறிந்து, குறிப்பிட்ட இடங்களை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இந்த முன்னேற்ற நடவடிக்கைகள் அனுமதியற்ற பயணசீட்டுகளை பறிமுதல் செய்தல் மற்றும் குற்றவாளிகளை கைது செய்தல் ஆகியவற்றால் பல்வேறு சட்டவிரோத வருமான வாய்ப்புகளை முடக்கியிருக்கிறது.
2. டிஜிட்டல் கண்காணிப்பு
மேம்பட்ட தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி, RPF இணையம் மூலம் பயணசீட்டு முன்பதிவு செய்யும் தளங்களை தொடர்ச்சியாக கண்காணிக்கிறது. மொத்தமாக முன்பதிவு செய்தல் மற்றும் முறையற்ற பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்காணித்தல் மற்றும் டிக்கெட் கவுன்டர்களில் சிசிடிவியைப் பயன்படுத்துவதன் மூலம். கறுப்புச் சந்தையை திறம்பட கண்டறிந்து தடுக்கும் திறனை RPF பலப்படுத்துகிறது.
3. IRCTC-யுடன் இணைந்து பணி புரிதல்
சந்தேகத்திற்கிடமான கணக்குகளைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்ய இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்துடன் (IRCTC) RPF இணைந்து பணி புரிகிறது. இந்த கூட்டு முயற்சியானது முகவர் மற்றும் தனிப்பட்ட பயணிகள் ஐடிகள் இரண்டையும் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முயல்கிறது. இதன் மூலம் மிகவும் பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான டிக்கெட் முறையை உறுதி செய்கிறது.
4. விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
பொது விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, RPF பல்வேறு ஊடக தளங்களில் கல்வி பிரச்சாரங்களை நடத்துகிறது. இந்த முன்முயற்சிகள் பயணிகளுக்கு அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகளைப் புகாரளிப்பது மற்றும் அதிகாரப்பூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
5. தொழில்நுட்ப உதவி
RPF தனது சைபர் செல்களை அதிநவீன மென்பொருள் மற்றும் வன்பொருளுடன் பயன்படுத்தி, கள்ள சந்தையை திறம்பட கண்காணிக்கவும் ரயில்வே பயணசீட்டுகளை விற்பனை செய்வதை அகற்றவும் செய்துள்ளது. இந்த தொழில்நுட்ப முன்னேற்றம், கள்ள சந்தை கும்பல்களை அடையாளம் காணவும். கலைக்கவும் திறமையாக இயங்குகிறது.
6. சட்ட ரீதியான நடவடிக்கைகள்
கள்ள சந்தையில் ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை செய்வதில் ஈடுபடும் குற்றவாளிகள் ரெயில்வே சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் சிறைத் தண்டனையும் அடங்கும். சமீபத்திய நீதித்துறை தீர்ப்புகள் கள்ள சந்தையில் ரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை செய்வதை 'சமூக குற்றம் என்று வகைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பிரச்சினையின் தீவிரத்தை எடுத்துக்காட்டுகின்றன.
ரயில்வே பாதுகாப்பு படையின் முயற்சிகளின் விளைவுகள்
RPF மேற்கொண்ட தந்திரமான நடவடிக்கைகள் பெரும் வெற்றிகளை பெற்றுள்ளன. பல உயர் அளவிலான குற்றம் செய்யும் கும்பல்கள் கலைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் பெருமளவு அனுமதியற்ற பயணசீட்டுகளை விற்பனை செய்வதை முடக்கவும், ரெயில்வே அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் உதவியுள்ளன.
செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்ட பாதை
தன் செயல்திறனை மேலும் மேம்படுத்த, RPF மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் முன்கணிப்பு நடவடிக்கைகளை தன் செயல்பாடுகளில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளது. முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள் பின்வருமாறு:
1. மேம்பட்ட AI மற்றும் இயந்திரக் கற்றல் (Machine learning)
1(a) நடத்தை முறை பகுப்பாய்வு: பயணசீட்டு முன்பதிவு நடத்தை வடிவங்களை ஆய்வு செய்து குற்றங்களை கண்டறிதல்.
1(b) நிகழ்நேர மோசடி கண்டறிதல்: நேரடி பரிவர்த்தனைகளை தடுக்க மெஷின் லெர்னிங் கருவிகள் செயல்படும்.
1(c) IP முகவரி கண்காணித்தல்: ஒரே IP முகவரியிலிருந்து அல்லது VPN களைப் பயன்படுத்தி வரும் பல முன்பதிவுகளை கண்டறிதல் மற்றும் தடுத்தல்.
2. பயோமெட்ரிக் சரிபார்ப்பு
2(a) முக அடையாளம்: பயணச்சீட்டு முன்பதிவுகளை பயோமெட்ரிக் தரவுகளுடன் இணைத்து பரிசோதனையின் போது பயணிகளின் சரிபார்ப்பை உறுதி செய்யும்.
2(b) கைரேகை ஸ்கேனிங்: முன்பதிவு கவுன்டர்களில் கட்டாய பயோமெட்ரிக் அங்கீகாரம் என்பது பரிவர்த்தனைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும்.
3. மேகக் கணிமை (Cloud computing) மற்றும் பெரிய தரவுப் பகுப்பாய்வு
3(a) நிகழ்நேர தரவு செயலாக்கம்: சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனையை அடையாளம் காண. மேகக் கணிமை உடனடியாக பயணசீட்டுகளை பகுப்பாய்வு செய்ய உதவும்.
3(b) முன்கணிப்பு பகுப்பாய்வு: வரலாற்று தரவுகளை பயன்படுத்தி குற்றங்கள் அதிகமாக இருக்கும் வழிகள் மற்றும் காலங்களில் தடுப்புச் செயல்பாடுகளை செயல்படுத்துதல்.
இரயில்வே பாதுகாப்புப் படையின் விரிவான அணுகுமுறை, பயணச் சீட்டுப் பரிவர்த்தனைகள் நேர்மை மற்றும் வெளிபடைத்தன்மையோடு பரிவர்த்தனை ஆவதை உறுதி காட்டுகிறது. மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலமும், பொதுமக்களை ஈடுபடுத்துவதன் மூலமும், கருப்பு சந்தைப்படுத்துதலைத் தடுக்க RPF தொடர்ந்து முக்கியப் பங்காற்றுகிறது. இந்தத் தந்திரங்கள் வளர்ந்துவருவதால், ஒரு பாதுகாப்பான மற்றும் சமமான ரெயில்வே அமைப்பை உறுதிசெய்வதற்கான ஒரு திசை இயக்கத்தை இது வழங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக