பெட்ரோல் ஊற்றி கொளுத்தியதில் இறந்த தமிழரசன் உடலை பெற மறுத்து நெமிலி பேருந்து நிலையத்தில் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை,ஜன 24-
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர்கள் சூர்யா என்கிற தமிழரசன் (வயது 23), விஜய கணபதி (வயது 22) இருவரும் டிரைவர்கள் இவர்கள் கடந்த 16ஆம் தேதி திருமால்பூரில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த பிரேம் உள்ளிட்ட ஐந்து பேர் முன்பு விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டனர். இந்நிலையில் வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கி வந்த ஒருவரை மடக்கி கேனை பறித்த கும்பல் அதிலிருந்த பெட்ரோலை 2 பேர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியது. இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழரசன் நேற்று முன்தினம் மாலை இறந்தார். இதனால் அன்றைய தினம் அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இந்நிலையில் அவருடைய உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் நெமிலி பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை திடீர் சாலை மறியலில்
ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கூடுதல் எஸ்பி குணசேகரன், டிஎஸ்பி ஜாபர்சித்திக் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்ட 50க்கும் அதிக மாணவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதற்கிடையே திருமால்பூரில் நூற்றுக்கும் அதிகமானோர் மற்றும் பாமகவினர் திரண்டு இறந்த தமிழரசன் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அரக்கோணம் சப் கலெக்டர். வெங்கடேசன், நெமிலி தாசில்தார். ராஜலட்சுமி உள்ளிட்டோர் தமிழரசன் உடலை பெற வலியுறுத்தி பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சம்மதிக்கவில்லை இந்த பிரச்சனையால் தமிழரசன் உடல் நேற்றும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இரவு வெகு நேரம் ஆகியும் உடன்பாடு ஏற்படாத நிலையில் திருமால்பூர் பகுதியில் உள்ள அம்மன் கோயில் அருகே தமிழரசன் உறவினர்கள் கிராம மக்கள் மற்றும் பாமகவினர் அங்கேயே சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக காலை முதல் நெமிலி பேருந்து நிலையத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நெல்வாய், திருமால்பூர், பள்ளூர், கீழ்வெண்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அசம்பாவிதம் தவிர்க்க 200க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட
செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக