மதுரை மேலூரில் டங்ஸ்டன் திட்டத்தை எதிர்த்து போராடிய போராடிய விவசாய குழுவினரை அழைக்கால் விவசாயிகளை மட்டும் அழைத்துச் சென்ற பாஜகவினர் என விவசாயிகள் குற்றச்சாட்டு.
டெல்லி செல்லும் விவசாய குழுவினர் மூலம் டங்ஸ்டன் திட்டம்ரத்து செய்தால் மகிழ்ச்சி இல்லையென்றால் தொடர் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும் -மேலூர் டங்ஷ்டன் போராட்ட குழு விவசாயிகள்
மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஷ்டன் சுரங்க திட்டம் அமைவதை எதிர்த்து விவசாயிகள் 65 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பாஜக சார்பில் விவசாய பிரதிநிதிகளை டெல்லி அழைத்துச் செல்வதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் தலைமையில் நான்கு கட்சி நிர்வாகிகளும் 7 விவசாயப் பிரதிநிதிகளும் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
.டெல்லி புறப்பட்டு சென்ற விவசாய குழுவினர் டங்ஸடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இல்லை என விவசாய சங்கப் பிரதிநிதிகள் குற்றச்சாட்டு.
மேலூர் அ ரிட்டாப்பட்டி கிடாரிப்பட்டி டங்ஷ்டன் சுரங்கம் தோண்டும் முயற்சியை மத்திய மாநில அரசு முழுமையாக ரத்து செய்து அறிக்கை வெளியிட கோரி மத்திய நிலக்கரி சுரங்கம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி அவர்களை டெல்லி சென்று சந்திக்க ஏற்படு செய்யப்பட்டது.
பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் தலைமையில் குழு புறப்பட்டது.
குழுவில் ஒருங்கிணைப்பாளர்களாக தலைவர் திரு மகா சுசீந்திரன் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் மாவட்டத் தலைவர் திரு ராஜசிம்மன்
திரு பாலமுருகன்
கிராம விவசாய பெருமக்கள்
1.மகாமுனி அம்பலம்
2.ஆனந்த்
3.போஸ்
4.முருகேசன்
5.முத்துவீரனன்
6.சாமிக்கண்ணு
7.ஆனந்த் ஆகியோர் டெல்லி அழைத்து சென்றனர்.
இந்த குழுவில் சென்ற விவசாய பிரதிநிதிகள் மேலூர் டங்ஷ்டன் போராட்ட குழுவில் இடம் பெற்றவர்கள் இல்லை என்றும் வெறும் விவசாயிகள் மட்டுமே அவர்கள் எங்கள் உறவினராக இருந்தாலும் கோவம் எழுச்சி வெற்றியடைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் நாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மதுரை விமான நிலையத்தில் செய்திகளை சந்தித்து கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக