உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மற்றும் வட்டார வள மையத்தின் சார்பில் மருத்துவ முகாம் சார்ந்த விழிப்புணர் பேரணி நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உளுந்தூர்பேட்டை வட்டார வளமைத்தின் சார்பில் மருத்துவ முகாம் சார்ந்து விழிப்புணர் பேரணி பெற்றது இதில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் சார்ந்து கல்வி செயல்பாடுகள் சார்ந்து விழிப்புணர்வு பேரணியானது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உளுந்தூர்பேட்டை ஹிந்து பள்ளியில் நடைபெற்றது. பேரணியை வட்டார கல்வி அலுவலர் காசிநாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சக்திவேல் தலைமை ஏற்று இந்நிகழ்வை தலைமையாசிரியர் செல்வி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இப்பேரணியானது பள்ளியில் துவங்கி விருத்தாச்சலம் சாலை சந்திப்பு பேருந்து நிலையம் திருச்சி சாலை சந்திப்பு வரை சென்று பள்ளி வந்தடைந்தது. பேரணியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி அளித்தல், பேச்சு பயிற்சி அளித்தல், தசையக்க பயிற்சி அளித்தல், உதவி உபகரங்கள் அளித்தல், மருத்துவ முகாம் நடத்துதல் ஆகியவற்றுக்கான கோஷங்கள் எழுப்பி அப்பள்ளியில் உள்ள 150 மாணவர்களுடன் பேரணி நடை பெற்றது. ஆசிரியர் பயிற்றுநர்கள் ராமலிங்கம் சாந்தகுமாரி சரிதா ரம்யா சிறப்பு பயிற்றுநர்கள் ஜானகிராமன் ராதா ஆகியோர் கலந்து கொண்டனர். பேரணிக்கு பாதுகாப்பாக சிறப்பு காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் , காவலர்கள் ராமநாதன் சதாம் உசேன் ஆகியோர் பாதுகாப்பு அளித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் விஜயகாந்த் தமிழக குரல் இணையதள செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக