கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க ! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 16 ஜனவரி, 2025

கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க !

பேரணாம்பட்டு ஒண்ணாவது வார்டு கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க நகர மன்ற உறுப்பினர்.ஒய்.அதீகுர் ரஹ்மான். கோரிக்கை.

பேரணாம்பட்டு ,ஜனவரி 16 -

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்னாதவாடு நகர மன்ற உறுப்பினர். ஒய்.அதீகுர் ரஹ்மான் வேலூர் மாவட்ட கலெக்டர். சுப்புலட்சுமிக்கு. கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. பேர்ணாம்பட்டு ஒண்ணாவது வார்டு குப்பைமேடு தரைக்காடு பகுதிகளில் கட்டிட வரைபட அனுமதி பெறாமல் ஒரு சில கட்டப்பட்டு வரும் கட்டிடங்களால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதில் நகராட்சி ஆணை யாளர் வேலவன் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறார். நகராட்சி நிர்வாகத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் கட்டிட உரிமை ஆளர்கள் மீதும் அதற்கு துணை போகும் நகராட்சி ஆணையாளர். வேலவன். போன்ற அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு மனுவில் கூறப்படுகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad