நெடுகுளா ஊராட்சி கிராமசபை மற்றும் கேர்கம்பை அரசுபள்ளி குடியரசு தின விழா.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேர்கம்பை அரசு ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளியில் 76 ஆவது இந்திய குடியரசு தின விழா நடைபெற்றது. தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மற்றும் கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் திரு. சில்லபாபு அவர்கள் கலந்துகொண்டார். அதனை தொடர்ந்து நெடுகுளா ஊராட்சியின் கிராமசபை கூட்டம் குன்னியட்டியில் நடைபெற்றதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தோழமை கட்சியினர் மற்றும் நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக