நிகழ்வுக்கு ஆரம்பமாக குத்துவிளக்கு ஏற்றப்பட்டு தலைமை ஆசிரியர் அழகு சுந்தரி தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவ மாணவியரிடையே பொங்கல் பண்டிகை முன்னிட்டு 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரும் சமூக ஆர்வலருமான தங்கராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அந்த பகுதி ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். முடிவில் தலைமை ஆசிரியர் அவர்கள் நன்றி கூறினார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக