நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் நேதாஜி் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா தேசபத்தி தின நிகழ்வு
நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் நேதாஜி் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு நூலகர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். வாசகர் வட்டத் தலைவர் மோகன் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக நூலகப் புரவலர் வடிவேல் கலந்துகொண்டு நேதாஜி படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக், புரவலர்கள் ரவி, முருகன், நித்ய சர்வானந்தா, செல்வகுமார், செல்வராஜ், நடராஜன், கிருஷ்ணகுமார், ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ரபி,ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் காளியப்பன், சுப்பிரமணி உள்ளிட்ட வாசகர்கள் பலரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அனைவராலும் தேசபக்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது. இறுதியில் வாசகர் வட்டப் பொருளாளார் அன்புசெல்வன் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நாமக்கல் செய்தியாளர் பார்த்திபன் மற்றும் நாமக்கல் மாவட்ட தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக