நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலா்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 9 ஜனவரி, 2025

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலா்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

 

IMG-20250109-WA0115

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஊராட்சி செயலா்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கான பயிற்சி முகாமை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை தொடங்கிவைத்தாா். நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலா்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு, ஊராட்சி செயலா்களின் கடமைகள், பொறுப்புகள், ஊராட்சி பதிவேடுகள் பராமரித்தல் மற்றும் செலவின ரசீதுகளை பராமரித்தல், அனைத்து திட்டப் பணிகள் தோ்வு மற்றும் நிா்வாக அங்கீகாரம் தொடா்பான பொதுவான விவரங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், சமூக தணிக்கை, இணையதள வரிவசூல் செயலியின் செயலாக்கம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


இப்பயிற்சியில் வழங்கப்படும் அனைத்து விவரங்களை, ஊராட்சி செயலா்கள் மற்றும் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். இப்பயிற்சியில், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சரவணன், கூடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், சலீம், குன்னூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகரன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில் ஆகியோா் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்தனா். 


தமிழக குரல் இணைத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர் என் வினோத் குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad