நாகர்கோயில் அருகே கார் - அரசு பஸ் மோதல்! ஒருவர் பலி
கேரளா பதிவெண் கொண்ட பொலிரோ கார் ஒன்று, நாகர்கோவில் செல்வதற்காக இன்று(ஜன.20) அதிகாலை வந்து கொண்டிருந்தது. களியங்காடு அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே வந்த அரசு பஸ் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அகில் (24) காரில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக