மயிலாடி ரிங்கல் தொபே மேல்நிலைப் பள்ளியில் பி. டி. செல்வகுமார் பரிசுகள் வழங்கினார்
அஞ்சுகிராமம் அடுத்த மயிலாடி ரிங்கல் தொபே மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது விழாவிற்கு பள்ளி தாளாளர் ஜெரோம் தலைமை தாங்கினார் குமரி பேராய பள்ளிகளின் கூட்டு மேலாளர் சுபா னந்தராஜ் தேசிய கொடி ஏற்றி வைத்தார் பேராய காரிய நிர்வாக குழு உறுப்பினர் ஆல்வின் நாயகம் ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்தார் தலைமையாசிரியை புஷ்பலதா தலைமை உரை ஆற்றினார் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார் விழாவில் கலப்பை மக்கள் இயக்க குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி தாளாளர் கால்வின், சமூக சேவகர் சொர்ணப்பன், உட்பட பலர் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் ஜான் ஸ்டீபன் ஆசிரியைகள் ஆஸா ஜான்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக