திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், திருப்பூர் மருதாசலபுரம் பிரதான சாலை, சிவன் திரையரங்கம் அருகில் நடைபெற்றது.வடக்கு மாவட்ட கழக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம் எல் ஏ., அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார், வடக்கு மாநகர மாணவரணி அமைப்பாளர் செ.திலக்ராஜ் தலைமையில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் து.கோபிநாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளர் மரியாதைக்குரிய மேயர் ந.தினேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழக துணை பொது செயலாளர்; முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா எம்.பி மற்றும் தலைமை கழக பேச்சாளர் அன்னவயல் கணேசன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.இந்த நிகழ்வில், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், இந்நாள் – முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள்,கழக உடன் பிறப்புகள் பொதுமக்கள் என அனைவரும் எழுச்சியோடு பெரும் திரளாக பங்கேற்றனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக