குடியாத்தம் ,ஜன 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பலமநேரி ரோடு லட்சுமணபுரம் தனியார் திருமண மண்டபத்தில்i நடைபெற்றது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு விழா நிகழ்ச்சி தொடங்கியது துவக்க நிகழ்ச்சியின் போது குத்துவிளக்கேற்றி காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் நா.முருகானந்தம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார் வேலூர் கோட்ட தலைவர் கோ. மகேஷ் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் கோட்ட அமைப்பாளர் T.V.ராஜேஷ் கோட்ட செயலாளர் ரவி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை வடக்கு தெற்கு போன்ற ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனார் இந்த கூட்டத்தில் இந்து முன்னணி கடந்த 44 ஆண்டு காலமாக பணி செய்வது குறித்தும் அடுத்து வரவிருக்கும் காலங்களில் நடைபெறும் இந்து முன்னணி நிகழ் விற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது மற்றும் ஜூன் மாதம்,1ஆம் தேதி நடைபெறும் மாநில மாநாட்டிற்க்கு கலந்து கொள்வது குறித்து பேசப்பட்டது
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியினை குடியாத்தம் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர் இறுதியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனீஸ் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக