வேலூர் ,ஜன 27 -
வேலூர் மாவட்டம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வேலூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று வேலூர் ஆசிரியர் இல்லத்தில் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் அ ஜோசப்பன்னையா தலைமையில் நடைபெற்றது மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர் ஜெயக்குமார் எம் எஸ் செல்வகுமார், கே சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக இணை ஒருங்கிணைப்பாளர் கே குணசேகரன் வரவேற்று பேசினார்.
அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் மாநில உயர்மட்ட குழு உறுப்பினருமான முனைவர் செ.நா. ஜனார்த்தனன் சிறப்புரையாற்றினார்.
பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிடக்கோரி பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி மாலை 5.30 மணி அளவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதன தீர்மானிக்கப்பட்டது.
2. சி பி எஸ் என்று அழைக்கப்படும் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை உடனடியாக அமல்படுத்த கோருவது.
3. முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை உடனடியாக வழங்கிட கோருதல்
4. இடைநிலை ஆசிரியர் முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய கோருதல்
5. அரசாணை எண் 234 ன் ரத்து செய்ய கோருதல்
6. இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க கோருதல்
7. ஒப்பந்த ஊதியம் மதிப்பூதியம் தொகுப்பூதியம் உள்ளிட்ட ஊதிய முறைகளை ரத்து செய்து அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க கோருதல்
8. உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும்
9. ஆசிரியர்களுக்கும் பனிப்பாதுகாப்பு சட்டம் உடனடியாக இயற்றப்பட வேண்டும்
10. அரசு உதவி பெறும் பள்ளியில் நியமனம் பற்ற ஆசிரியர்களுக்கு நியமன ஒப்புதல் ஆணை வழங்கப்பட வேண்டும்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி தமிழ் ஆசிரியர் கழகம் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட ஆசிரியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக