கிறிஸ்மஸ்,புத்தாண்டை முன்னிட்டு 14 வது வார்டு திமுக சார்பில் அனுப்பர்பாளையம் சர்ச்சில் கேக் வெட்டி கொண்டாடினர். கிறிஸ்மஸ் , புத்தாண்
டை முன்னிட்டு திருப்பூர் 14 வது வார்டுக்கு உட்பட்ட அனுப்பர்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள டி இ எல் சி அருள்நாதர் ஆலயம் சர்ச்சில் 14 வது வார்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக மாவட்ட விவசாய அணி அமைப்பாளரும், 14 வது வார்டு திமுக செயலாளரும், கிணத்துக்கடவு தேர்தல் பணி குழு பொறுப்பாளருமாகிய மு.ரத்தினசாமி அவர்கள் தலைமையில் பாத்திர தொழிற்சங்க பொது செயலாளர் வேலுச்சாமி, 15 வேலம்பாளையம் பகுதி துணை செயலாளர் மணிமாறன், திருப்பூர் வடக்கு மாநகர மகளிர் அணி அமைப்பாளர் கௌரி நாகராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் சர்ச்சுக்கு நேரில் சென்று அங்கு கூடியிருந்த கிறிஸ்தவ பெருமக்களுக்கு கிறிஸ்மஸ், புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் கேக் வகைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் டி .இ.எல். சி அருள் நாதர் ஆலய சபை குரு ஸ்டேன்லி தேவகுமார் மற்றும் ஆப்ரகாம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
அ.காஜாமைதீன் மற்றும் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக