திருநெல்வேலியில் மிக முக்கிய பேருந்து நிலையமான வேய்ந்தான்குளம் பேருந்து நிலையத்திலிருந்து, தூத்துக்குடி, தென்காசி, நாகர்கோயில், மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து பெருமளவில் மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த புதிய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கும் முன் செயல்பட்டு வந்த தபால் பெட்டியானது தற்போது செயல்பாட்டில் இல்லை. இதனால் பெருமளவில் தபால் பெட்டியை பயன்படுத்திய பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே போர்க்கால அடிப்படையில் தபால் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிதாக ஒரு தபால் பெட்டி அமைக்க வேண்டும் என எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் கௌரவச் செயலாளர் ஆ. சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக