தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரத்தை தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை அலுவலர் ஒன்றிய நிர்வாகிகள் சந்தித்தனர்.
அப்போது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்தை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் ஊர்ப்புற நூலகர்களின் வாழ்வாதார பிரச்சினை, மழையால் பாதிக்கப்பட்டு கழிக்கப்படாமல் மீதமுள்ள நூல்களை இருப்பு நீக்கம் செய்து தருதல், தினக்கூலி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு,
தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு
ஊதிய உயர்வு,
குடியரசு மற்றும் சுதந்திர தின நாள்களில் மாவட்ட ஆட்சித் தலைவர், சிறப்பாக பணியாற்றும் நூலகர்களுக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க பரிந்துரைத்தல் உள்பட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன .
மேலும் அலுவலக பணியாளர்கள், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் ஆகியோருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது மாவட்ட தலைவர்
ஜெ.இராஜதுரை, மாவட்ட செயலாளர் அந்தோணி செல்வராஜ் , மாவட்ட பொருளாளர் தங்க மாரியப்பன் , மாநில செயலாளர்
இராம் மோகன் , மாவட்ட நிர்வாகிகள்
தளவாய்,சாரதா, சாந்திராஜன்,கவிதா மற்றும் பிரான்சிஸ் உமா, சுப்புலட்சுமி கலை செல்வி, பாலின் நவமலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக