குமரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் சேவையை இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு.
கன்னியாகுமரி மாவட்டம்.108 ஆம்புலன்ஸ் சேவை என்பது ஏழை எளிய மக்களின் உயிர் காக்க உதவும் உன்னத சேவை ஆகும்.
இந்த சேவையினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பட்டு வருகின்றனர். இதில் பணிபுரிந்து வரும் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் விபத்து மற்றும் பல்வேறு மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு திறம்பட செயல்பட்டு துரிதமாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களின் உயிரை காக்கின்றனர்...
அதே சமயத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ்கள் மாவட்ட நிர்வாக அதிகாரியினால் தொழிலாளர்கள் பணி பார்க்க தயாராக இருந்தும் மாவட்ட நிர்வாக அதிகாரி அவர்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தொழிலாளர்களை பணி செய்ய விடாமல் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் மருத்துவ உதவி தேவைப்படுகின்ற ஏழை எளிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகின்றன. எனவே மாவட்ட நிர்வாகமும் மாவட்ட சுகாதார துறையும் விரைந்து தலையிட்டு இவர் மீது துறையில் ரீதியான நடவடிக்கை எடுத்து இச்சேவையை தங்கு தடை இன்றி 24 மணி நேரமும் கிடைக்குமாறு உறுதி செய்ய வேண்டும்.
என குமரி மாவட்ட பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக