முதுகு தண்டுவட பாதிப்பை ஏற்படுத்தும் தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை - வாகன ஓட்டிகள் வேதனை.
திருச்செந்தூரிலிருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பிரதான சாலையான ஆத்தூர் முக்காணி பழைய காயல் முள்ளக்காடு முத்தையாபுரம் பகுதியில் கடந்த 2023 டிசம்பர் 17 & 18 ஆகிய தேதிகளில் கனமழை காரணமாக பெருமளவில் சேதம் ஏற்பட்டது.
அதன் பின்பு ஒரு வருட காலம் ஆகியும் இதுவரை சாலை சீரமைக்கப்படவில்லை. முள்ளக்காடு முத்தையாபுரம் பகுதிகளில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில், கனரக வாகனங்கள் போக்குவரத்து 24 மணி நேரமும் இருந்து கொண்டே உள்ளது.
மேலும் தூத்துக்குடி துறைமுகம் செல்லும் வாகனங்களும் இந்த வழியைத்தான் பயன்படுத்தி வருகின்றன. திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் இந்த சாலையில் மிகப்பெரிய பள்ளங்கள் ஆங்காங்கே காணப்பட்டு வருகிறது.
இதனால் இலகு ரக வாகனங்கள் அந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி, பயணிகள் பாதிக்கப்படுவதும், வாகனங்கள் பாதிப்படைவதும் தொடர்ந்து வருகிறது.
தவிர இரு சக்கர வாகன ஓட்டிகள் முதுகு தண்டுவட பாதிப்பு உண்டாகிறது. இதனால் முறையான சாலை வரி பாக்கியின்றி செலுத்தியும் அரசாங்கம் தனது கடமையை செய்ய மறுப்பதாக வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.
மேலும் சமூக ஆர்வலர்கள் விடுத்துள்ள கோரிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வரை ஒரு முறை காரில் பயணம் செய்தால் போதும், அரசு அதிகாரிகள் தாமாகவே அந்த சாலைகள் சீரமைத்து விடுவார்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக