ஆண்டிபட்டியில் உள்ள பெருமாள்சாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா
தேனி மாவட்டம் மதுரை -தேனி தேசிய நெடுஞ்சாலை அருகே மேற்கு ஓடைத்தெருவில் உள்ள கம்மவார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பெருமாள்சாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் விரதம் இருந்த பெண்கள் வேத பாராயணம் ஓதி பூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.
இதனையடுத்து பெருமாள் சாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷங்களுடன் பரமபத வாசல் திறக்கப்பட்டு,
சொர்க்கவாசல் வழியாக பெருமாள்சாமி பூக்கள் தூவ, மேளதாளம் முழங்க ஊர்வலத்துடன் வெளியேறி வந்து கோவிலை அடைந்தனர்.
கோவிலில் அனைவருக்கும் துளசி தீர்த்தம் உள்ளிட்ட பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கம்மவார் உறவின்முறை தலைவர் பாலமுருகன், செயலாளர் மோகன்தாஸ் ,பொருளாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்கவாசல் வழியாக வந்து, பெருமாள் சுவாமியை தரிசனம் செய்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக